கோவையில் தலைகவசம் அணிவதை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கிய சமூக ஆர்வலர்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கி சமூக ஆர்வலர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கி சமூக ஆர்வலர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜாசேதுமுரளி. 'பசியாற சோறு' என்ற அமைப்பை துவங்கி திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மீதம் ஆகும் உணவை பெற்று ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். நாடகம் மற்றும் திரைபடங்களில் நடித்து உள்ள இவர், சமூக சேவையையும் செய்து வருகிறார். பொதுமக்களிடையே தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் வழங்கும் நிதியில் இருந்து தலைகவசங்களை வாங்கி தலைகவசம் இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருசக்கர வாகனங்களில் தலைகவசம் இல்லாமல் பயணித்த பொதுமக்களுக்கு 20 தலைகவசங்களை இலவசமாக வழங்கினார்.



இது குறித்து ராஜாசேதுமுரளி கூறுகையில், "தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறேன். 'பசியாற சோறு' மூன்று சக்கர வாகனத்தில் வைத்து உள்ள உண்டியலில் பொதுமக்கள் அளிக்கும் பணத்தை கொண்டு தலைகவசங்களை வாங்கி அதனை கொடுக்கிறேன். மேலும், பொதுமக்களுக்கு செய்யும் சமூக சேவை என்பதால், தனக்கு 270 ரூபாய்க்கு குறைவான விலையில் தலைகவசங்கள் வழங்கப்படுகின்றன. சுதந்திர தினத்தன்று 20 பேருக்கு இலவச தலைகவசம் வழங்கினேன். இன்று 20 வழங்க கொண்டு வந்துள்ளேன். தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி தலைகவசம் இல்லாத அனைவருக்கும் தலைகவசம் வழங்க பொதுமக்கள் அளிக்கும் நிதியைப் பயன்படுத்துகிறேன். இதனை அனைவரும் அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காக தன்னால் ஆன ஒரு சிறிய முயற்சியே இது, என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...