கனிமவள கொள்ளையை தடுக்க மனு அளித்தவருக்கு செங்கல் சூளை அதிபர்கள் கொலை மிரட்டல் : பாதுகாப்பு கோரி மனு

கோவை : கனிமவள கொள்ளையை தடுக்க மனு அளித்ததால் செங்கல் சூளை அதிபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.


கோவை : கனிமவள கொள்ளையை தடுக்க மனு அளித்ததால் செங்கல் சூளை அதிபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.

கோவை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், சின்ன தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதாகவும், கனிமவள கொள்ளையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இது குறித்து ரங்கராஜ் கூறியதாவது :- இந்தப் பகுதி முழுவதும் விவசாய நிலங்கள். பெரும்பாலானோர் விவசாயம் செய்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு செங்கல் சூளை அமைத்து தினமும் 4,000 லோடு செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளவர்கள், 50 முதல் 60 அடி ஆழம் தோண்டி மண் எடுக்கின்றனர். மேலும், மண் அள்ள ரோபோக்களை உபயோகிக்கின்றனர். தற்போது கிராவல் மண் மற்றும் மணல் அள்ளப்படுகிறது. இவ்வாறு கனிமவள கொள்ளையில் ஈடுபடும் செங்கல் சூளை உரிமையாளர்கள் இயற்கை வளத்தை அழித்து கோடி கணக்கில் சம்பாதித்துள்ளனர். மேலும், பச்சை செங்கலை வேக வைக்கும் போது, வெளிவரும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

கனிமவள கொள்ளை தொடர்பாக மனு அளித்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இது குறித்து மனு அளித்ததால் செங்கல் சூளை உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். கனிமவள கொள்ளையில் ஈடுபடுபவர்களின் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நேரிடையாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...