இன்னும் 50 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும், செவ்வாயும் இருக்கும் : இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கணிப்பு

கோவை : 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும், செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார். .

கோவை : 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும், செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார். .

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மத்திய அரசின் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்ற மூன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது :- செப்டம்பர் 7 என்பது உலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தியாவின் 130 கோடி மக்களும், நிலவிற்கு திரும்பவும் செல்ல வேண்டும் என்று நினைக்கும் உலக நாடுகளும் அந்த நாளை காண ஆவலுடன் காத்துள்ளனர். அதற்கு மேலும் நிலவை நோக்கி செல்லும் சந்திராயன் இரண்டு நிலவின் நீள்வட்டப்பாதையை ஈர்ப்பு விசையுடன் அடையும். அதன் பின்னர், விக்ரம் பிரக்யான் களங்கள் அதில் இருந்து விலகி மெதுவாக செப்டம்பர் 7-ல் நிலவை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக சவாலான காரியமாக இருந்தாலும் அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ளது. சந்திராயன் நிலவில் இறங்கும் அந்த 15 நிமிடத்திற்காகக் காத்திருக்கிறோம்.

மேலும், நிலவும், செவ்வாயும், பூமியும் இன்னொரு தளமாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் ஒரு கண்டம் மனிதர்கள் வசிக்கும் பகுதியாக உள்ளதோ, அதேபோல, நிலவும், செவ்வாயும், பூமிவாழ் மனிதர்கள் வாழும் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 50 அல்லது 60 ஆண்டுகளில் அது உருவாக வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன், என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...