திருப்பூரில் பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக்கை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகள் மனு

திருப்பூர் : பள்ளிக்கு அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : பள்ளிக்கு அருகாமையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பள்ளி குழந்தைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் முத்தணம்பாளையம் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள விஜயாபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு தினந்தோறும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றனர். பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இந்த பள்ளி மாணவர்கள் தினமும் 8 கி.மீ நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர். மேலும், நடந்து செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால், நடந்து போகும் போது அதிக தொந்தரவுகள் வருவதாகவும் புகார் கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுக்க இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர்கள் சென்றனர். அங்கு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.

பின்னர், சில மாணவர்கள் மட்டும் சென்று பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...