கோவை : புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் மழையினால் சாய்ந்த மரங்களுக்குப் பதிலாகவும், பெரியார் நகர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்த இளைஞர்களின் செயல்கள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு சில பகுதிகளில் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து, சாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு போக்குவரத்துகள் சரி செய்யப்பட்டது. இப்படி இருக்க சாய்ந்த மரங்களுக்குப் பதிலாகவும், பெரியார் நகர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் "ஜாலி பிரண்ட்ஸ்" என்ற பெயரில் செயல்படும் இளைஞர்கள் புதிதாக மரக்கன்றுகளை நட்டனர். இதையடுத்து, நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

இளைஞர்களின் இந்த நற்செயலைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் இளைஞர்களின் உதவியுடன் ஆர்வமாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் நேரத்தை வீணாக செலவழிக்காமல் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.