கோவை : கோவையில் மாமியாரின் கன்னத்தில் அறைந்த மருமகனை கோபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள சோப்பு கம்பெனி பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாலினி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகிறது. இந்த நிலையில், ராஜேந்திரன் தான் செய்து வரும் பெயிண்டிங் வேலைக்கு சரியாக செல்வதில்லை எனக் கூறி மனைவிக்கும், அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்தது. இப்படி இருக்க நிறைமாத கர்ப்பிணியான ஷாலினி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கவுண்டம்பாளையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து, ராஜேந்திரன் ஷாலினியின் சகோதரி வீட்டுக்கு சென்று தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதில், ஷாலினியின் தாயார் மீனா, ராஜேந்திரனை சரியாக வேலைக்கு செல்வதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது மாமியாரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து, மாமியார் மீனா தனது கணவர் தங்கமணியிடம் விவரங்களை அலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த தங்கமணி மருமகனுடன் நேரில் வந்து பேசும்போது வாக்குவாதம் மூண்டு கைகலப்பாக மாறியது. பின்னர், தங்கமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகன் ராஜேந்திரனின் முதுகில் குத்தினார். இதைத்தொடர்ந்து, தப்பி ஓட முயற்சி செய்த மருமகனை மீண்டும் சரமாரியாக குத்தினார். இதனால், ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை அருகே உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
ஆனால், ராஜேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருமகனை கத்தியால் குத்தி தலைமறைவாக இருக்கும் மாமனாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.