கோவையில் வாட்ஸ்அப் குழு அமைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது

கோவை : கோவை மாநகரில் வாட்ஸ் அப் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை : கோவை மாநகரில் வாட்ஸ் அப் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் இந்த போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலும் கோவைக்கு வந்து செல்கின்றனர். எனவே, கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும், கோவை மாநகர போலீசாரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையாளர்களை தடுக்கும் நோக்கில், கண்காணிப்புகளில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில், கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தனிப்படை போலீசார் கல்லூரிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து கஞ்சா விற்பனையை செய்து வந்த கும்பலின் முக்கிய குற்றவாளியை மாநகர தனிப்படை போலீசாரும் பந்தய சாலை போலீசாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தும்மக்குண்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த வன்னிய பெருமாளின் மகன் மலைச்சாமி (33). இவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். குறிப்பாக, கோவை அரசு கல்லூரி மற்றும் மாநகரில் உள்ள தனியார் கல்லூரிகளை குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், இவரிடம் கஞ்சா தேவைப்படுபவர்கள் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து வாங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த ரகசிய தகவல் அறிந்த போலீசார் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 

தனிப்படை போலீஸ் குழுவை சேர்ந்த உதவி ஆய்வாளர் கந்தசாமி மற்றும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் சக்திவேல், உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் கஞ்சா விற்பனையாளர்களை பின்தொடர்ந்து விற்பனை செய்து மீண்டும் தேனிக்கு திரும்பும் போது கையும் களவுமாக பிடித்தனர்.

இதை தொடர்ந்து, அவரிடம் இருந்த ஒன்னேகால் கிலோ கஞ்சா மற்றும் 2,000 ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மலைச்சாமி ஆந்திராவிலிருந்து கஞ்சா கொள்முதல் செய்து, தேனி பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கோவை மாநகரை குறி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மலைச்சாமி நேற்றிரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...