கோவை : ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் கோவையில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவயரிடையே நடத்தப்பட்டது.

சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியானது இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இடைநிலைப் பிரிவில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ-மாணவியரும், மேல்நிலைப் பிரிவில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியரும், கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை, பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ-மாணவியரும் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெ. செட்ரிக் மானுவல் பரிசுகளை வழங்கினார்.