கோவையில் 16 வயது சிறுமியை காதல் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் : போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

கோவை : அன்னூர் அருகே 16 வயது பள்ளி சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தைகளை கூறி கேரளாவிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.


கோவை : அன்னூர் அருகே 16 வயது பள்ளி சிறுமியிடம் காதல் ஆசை வார்த்தைகளை கூறி கேரளாவிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் சர்வீசராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சந்தோஷூம் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியைக் கண்டித்து அவரை விடுதியில் சேர்த்தனர். இந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை விடுதிக்கு செல்லும் வழியில் வைத்து சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் சிறுமியிடம் கேரளாவிற்கு செல்லலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் கேரளாவிற்கு சென்ற நிலையில் அங்கு வைத்து இளைஞர் சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இருவரும் மீண்டும் கோவைக்கு வந்தனர்.

இந்த நிலையில், சிறுமி மீது சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்ததில் அவரை இளைஞர் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 



இதையடுத்து, காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் இளைஞரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...