கோவை : குமாரசாமி காலனி பகுதி மக்களை வெளியேற்றும் கோவை மாநகராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்து பி.ஆர். நடராஜன் தலைமையில் அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டு காலமாக வசிக்கும் மக்களை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு பிறப்பித்து அதற்கான நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காந்திபூங்கா அருகில் உள்ள குமாரசாமி காலனி மக்களை வெளியேற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனைக் கண்டித்து கோவை காந்திபூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பகுதிகழக செயலாளர் சண்முகசுந்தரம், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சி.பி.எம். மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி உள்ளிட்ட அனைத்து கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று கோவை மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து உரையாற்றினர்.
பெண்கள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “நிலம் எங்கள் உரிமை, ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் மக்களை நகரத்தைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடு,” என முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பேசியதாவது :-ஏழை, எளிய உழைப்பாளி மக்களை நகரத்தை விட்டு அப்புறப்படுத்த நினைக்கும் அரசு நிர்வாகத்தின் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தற்போது, கோவை மாநகராட்சி நீர்நிலைகளில் உள்ள மக்களை மட்டுமல்லாது, அரசு புறம்போக்கு நிலத்தில் நுறாண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களைக்கூட வெளியேற்றுவதற்கு முயற்சிக்கிறது. அனைத்து பணிகளும் நகரத்தை சேர்ந்து இருப்பதால் நகரத்தில் இருந்து இம்மக்களை வெளியேற்றக்கூடாது. தனித்தனியாக போராடும் மக்களை ஒன்றினைக்கும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் வருகிற செவ்வாய்கிழமை குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு திரண்டு வரவேண்டும். தங்களது தரப்பின் நியாயத்தை இந்த அதிகாரிகளிடம் கேட்போம். நிலம் நமது உரிமை என்பதை நிலைநாட்டுவோம், என்றார்.