நீலகிரி : கோத்தகிரி அருகே கேர்கம்பை பகுதியில் உணவிற்காக தேயிலை தோட்டப் பகுதியில் உலா வந்த புள்ளி மானை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்கம்பை பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்து பொது மக்களை அச்சுறுத்தி செல்வது வழக்கம். இந்த நிலையில், உணவு தேடி இங்குள்ள தேயிலை தோட்ட பகுதிக்கு வந்த புள்ளிமான் ஒன்று இப்பகுதியில் இருந்த தாவரங்களை உண்டு விட்டு வெகு நேரம் உலா பந்தை கொண்டிருந்தது. இந்தப் பகுதியில் அதிக அளவிலான மலைத் தோட்டப் பயிர் உள்ளதால், இவற்றை உண்பதற்காக இவை அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். ஆனால், இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் இருப்பதால் புள்ளி மானை நாய்கள் தாக்கி விடாதவாறு வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட நேரமாக அப்பகுதியில் இருந்த இந்த புள்ளிமானை இப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.