ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 6 உயர்வு : புதிய விலை திங்கட்கிழமை முதல் அமல்

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. நுகர்வோர்களுக்கு தரமான பால் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 28 இருந்து ரூ. 32ஆக, அதாவது லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 35 இருந்து ரூ. 41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தப்படுகிறது.அதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 6 உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் திங்கள் முதல் அமலுக்கு வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...