கோவை : கோவை மாநகராட்சி வரி உயர்விற்கு எதிராக மாவட்ட அனைத்து கட்சி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் சி.பி.எம். மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க. மாநகர செயலாளரும், சிங்காநல்லூர் சட்டபேரவை உறுப்பினருமான நா.கார்த்திக், தி.மு.க. அவைத்தலைவர் நாச்சிமுத்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநகர பொருப்பாளர் கணபதி சிவக்குமார், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர். ஆர்.ஆர்.மோகன் குமார் மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் சேதுபதி, கிருஷ்ணசாமி, சி.பி.ஐ.எம். கோவை மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மபநான், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சி.பி.ஐ. மாநில பொருளாளருமான எம்.ஆறுமுகம் மற்றும் தேவராஜ், சிவசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர்கள் தனபால், ராதாகிருஷ்ணன், ரமேஷ், வடிவேல், த.பெ.தி.க. நிர்வாகி ஜீவானந்தம், ஆம் ஆத்மி கட்சி சார்ந்த ஆண்ட்னிசார்லஸ் விசிக உள்ளிட்ட கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மாநில அரசின் ஆணையை சொல்லி கோவை மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்பு வீடுகளுக்கு 50 சதவீமும், குடியிருப்பு அல்லாத அனைத்துவகை கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு 100 சதவீதம் என உயர்வு செய்துள்ளது. இத்துடன் 2018 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வரி உயர்வு அமலாக்கப்படுவதாக கூறி நிலுவை தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.
தொழில் நெருக்கடி நிரந்திர வேலையின்மை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோவை மாநகர மக்கள், வியாபாரிகள் சிறுகுறு தொழில்முனைவோர்கள் வாடகை வீட்டு உரிமையாளர்கள், பெரும் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை நகராட்சி துவங்கி மாநகராட்சி வரையிலான 150 ஆண்டுகால வரலாற்றில், 50 சதவீதம், 100 சதவீதம் வரி உயர்வு என்பது எப்போதும் தீர்மானிக்கப்பட்டதில்லை. புதிய மாமன்றம் அமைந்து மக்கள் பிரதிநிகள் மன்றம் தீர்மானிக்கும்வரை கோவை மாநகராட்சி நிர்வாகம் சொத்துவரி உயர்வு அரசானையை நடைமுறைப்படுத்தக்கூடாது. ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த அனைத்து கட்சி கூட்டம் மாநராட்சி நிர்வாகத்தையும், மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறது.
2. கோவை குடிநீர் ஆதாரம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனமான பிரன்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மாநாகராட்சி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் கருத்து சொல்பவர்களை கைது செய்து அச்சுறுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டவரை எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
3. இவ்வரி உயர்வு சம்பந்தமாக 100 வட்டங்களில் அனைத்து கட்சி நிர்வாகிகள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தை இம்மாத இறுதிக்குள் நடத்துவது மற்றும் அனைத்து கட்சி சிறுகுறு தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகள், பெரு தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், நில விற்பனை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தை செப்டம்பர் முதல்வாரத்தில் நடத்துவது, இந்த கூட்டத்தில் தொடர்ச்சியாக நடத்த இருக்கிற இயக்கங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.