பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் விவசாயம் செய்ய உரம், விதைகளை அரசு வழங்க கோரிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் மீண்டும் விவசாயத்தை துவங்க உரம் மற்றும் விதைளை அரசு வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் மீண்டும் விவசாயத்தை துவங்க உரம் மற்றும் விதைளை அரசு வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக உதகை, கோடப்பமந்து, காந்தல், எமரால்டு, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததது. இதன் காரணமாக, அங்கு பயிரிடப்பட்டிருந்த முள்ளங்கி, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், கிழங்கு உள்ளிட்ட மலைத் தோட்ட காய்கறிகள் நீரில் மூழ்கின. இதன் காரணமாக, சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் நாசமாகின.



இதனை தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது தண்ணீர் வடிய தொடங்கிவிட்ட நிலையில், மீண்டும் விவசாயம் துவங்க இப்பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இருப்பினும், விதைகளும், உரங்ளையும் இந்த ஒரு போகத்திற்கு அரசு வழங்கினால், மீண்டும் தங்களால் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...