கோவை : பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததுதான் வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் என அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் உறவினர் இல்லதில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாளைய தினம் கழகத்தின் பொது செயலாளர் சசிகலாவின் 67-வது பிறந்த நாள். எதற்போது சசிகலா சிறையில் இருப்பதால் விழாவாக கொண்டாட முடியாத நிலை உள்ளது. எனினும், தொண்டர்கள் அவரது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் விழாவாக கொண்டாட விரும்புகின்றனர். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பெரும் விழாவாக கொண்டாடப்படும். ஜெயலலிதாவிடம் ஆசீர்வாதம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தவர் சசிகலா. சசிகலா பிறந்த நாளில் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்குடன் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அ.ம.மு.க. தோல்வியை கண்டு துவண்டு போய் வெளியேறுபவர்கள் மாற்று கட்சிக்கு செல்பவர்கள் செல்கின்ற இடத்தில் என்ன நிலைமை என்பதை அறிய வேண்டும். அ.ம.மு.க.வில் இருந்து கட்சியினர் வெறியேறுவது தனக்கு வேதனை அளிக்கிறது. யாரும் பிரிந்து செல்ல வேண்டாம். டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கழக பொது செயலாளர் சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவரும் வரை சிறிது காலம் அமைதி காக்க வேண்டும். அதுவரை பொறுமையாக காக்க வேண்டும். பல துயரங்களை தாங்கிக்கொண்டு சசிகலா சிறையில் உள்ளார். ஜெயலலிதாவை தெய்வமாக சசிகலா இப்பவும் சிறையில் வழிபட்டு வருகிறார். வரும் டிசம்பர் அல்லது பிப்ரவரியில் மாதத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளி வர வாய்ப்பு உள்ளது.
வேலூரில் நடைபெற்ற தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடாதது தனக்கு வருத்தம் அளிக்கிறது. போட்டியிட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என தொண்டர்களின் எண்ணதிற்கு ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து கட்சியினருக்கு டிடிவி தினகரன் விளக்கம் அளித்து உள்ளார். நடைபெற்ற தேர்தல்களில் புதிய சின்னத்தில் போட்டியிட்ட அ.ம.மு.க. 22 சட்டமன்ற தொகுதிகளில் 7% வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து உள்ளது, எனக் கூறினார்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. யாருடனாவது கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, கூட்டணி இல்லாமல் எந்த கட்சிக்கும் வெற்றி என்பது சாத்தியமில்லை. பா.ஜ.க. இல்லாத கூட்டணி தான் எதிர்ப்பார்க்கிறோம் எனக் கூறினார்.
மேலும், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கொண்ட நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளி வந்தால் இணைந்து செயல்பட முடியுமா என்ற கேள்விக்கு, தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ சசிகலாவை பற்றி தவறாக பேசுவதில்லை. அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் தான் அவதூறாக தொடர்ந்துபேசி வருகிறார். சிறையில் தவறி கூட இந்த அரசை பற்றி சசிகலா தவறாக பேசவில்லை. சசிகலாவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதால் தான் இத்தனை போராட்டங்கள். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன சொன்னாலும் தொண்டர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். நீலகிரியில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிட்டு இருக்க வேண்டும். அ.ம.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் அளிக்கப்பட்டு உள்ளது. டிடிவி தினகரனுடன் அங்கு செல்ல உள்ளேன். தற்போது சற்று சோர்வுடன் உள்ளோம். ஆனால், மீண்டும் எழுவோம், என அப்போது புகழேந்தி தெரிவித்தார்.