கோவை : கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்களை தட்டி கேட்ட வனக்காப்பாளர் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட வனப் பகுதிகளில் அனுமதியின்றி யாரும் நுழையக்கூடாது என வனத்துறையினர் கடும் விதிகளை விதித்துள்ளனர். அதேபோல, அனுமதியின்றி நுழைபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு சில பகுதிகளில் வன எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் நபர்கள் அத்துமீறி நுழைவதும் வாடிக்கையாகவும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி மதுக்கரை வனசரக்கத்திற்கு உட்பட்ட மூங்கில் மடை குட்டை என்ற வனப்பகுதியில் உள்ள நீரோடையில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுமதியின்றி உள்ளே சென்று மது அருந்திவிட்டு நீரோடையில் குளித்துள்ளனர். இதையடுத்து, மலை கிராம மக்கள் அந்த இளைஞர்களின் நடவடிக்கை தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த வனக்காப்பாளர் சோழமன்னன்(43) அனுமதியின்றி வன எல்லைக்குள் வரக்கூடாது என எச்சரித்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்களில் ஒருவரான ஆலந்துறையை சேர்ந்த அன்பு என்ற அருள்குமார் (23), வனக்காப்பாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, அவர் வனக்காப்பாளர் சோழ மன்னனை தனது கையால் முகத்தில் தாக்கியுள்ளார். இதில், அவரது மூக்கு உடைந்து ரத்தம் வெளியேறியது. பின்னர், தாக்குதல் நடத்திய நபர் உட்பட அங்கு இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மதுக்கரை வனச்சரக வனக்காப்பாளர் சோழமன்னன் காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வனக் காப்பாளர்கள் சார்பில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்படியிருக்க ஆய்வாளர் தங்கம் தலைமையிலான போலீசார் வனக்காப்பாளரை தாக்கிய கல்லூரி மாணவர் அன்பு என்ற அருண்குமாரை கைது செய்தனர். இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 b ,323 ,353 ,506 (1) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.