கோவையில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை : சிகிச்சைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டு, பாதுகாப்பாக காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டு, பாதுகாப்பாக காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் சாலை ஓரங்களிலும் குப்பைத் தொட்டிகளிலும் தூக்கி வீசிச் செல்லும் அவலங்கள் அதிகரித்து வருகிறது. இதில், ஒரு சிலர் குடும்ப சூழலை காரணம் காட்டி இந்த கொடும் பாவச் செயலில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர் தகாத உறவின் காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை தூக்கி எறிந்து செல்கின்றனர். இப்படி சாலையில் வீசப்படும் குழந்தைகள் மனிதநேயம் உள்ளவர்களால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே கடந்த 13-ம் பச்சிளம் குழந்தை ஒன்று பொதுமக்களால் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையின் துணையுடன் பொதுமக்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஒரு கிலோ 120 கிராம் எடை கொண்ட அந்த பச்சிளம் ஆண் குழந்தைக்கு மேல் சிகிச்சை கொடுக்க மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், குழந்தை 2 கிலோ 100 கிராம் உடல் எடை கூடி ஆரோக்கியமானதையடுத்து, காப்பகத்தில் ஒப்படைக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தர்வேலின் முன்னிலையில் குழந்தைக்கு வரதன் என பெயரிடப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாக்கம் சாலையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...