கோவை மாநகராட்சிக்குட்பட்ட 1,543 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சியில் 1,543 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை : கோவை மாநகராட்சியில் 1,543 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாநகராட்சி ஆர்.எஸ். புரத்தில் மாநகராட்சி பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 740 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 579 பேருக்கும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 224 பேருக்கும் என ஆக மொத்தம் 1,543 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா மடிக்கணினிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.



இதைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:- விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் இந்தியாவிற்கே முன்னோடியான திட்டமாகும். மேலும், 14 வகையான நலத்திட்டங்களை மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமியில் கட்டணமில்லாமல் ஐ.ஏ.எஸ். மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவர்கள் இவற்றை பயன்படுத்திக் கொண்டு கல்வியில் உயர்ந்து உங்களது பெற்றோருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும், எனக் கூறினார்.



மேலும், பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் மாநகராட்சி பாதாள சாக்கடை பணியாளர்களுக்கு பணியின் போது பயன்படும் வகையில், பாதுகாப்பு ஆடைகள், பாதுகாப்பு தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடி, ஹெட்லைட், கையுரை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை 11 பணியாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

பின்னர், தெற்கு மண்டலம் 89வது வார்டு சுண்டக்காமுத்தூர் காமாட்சியம்மன் கோவில் மைதானத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினையும், 90-வது வார்டு கோவைப்புதூர் நூலகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியில் கூடுதல் அறை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.



​இவ்விழாவில் மண்டல உதவி ஆணையாளர்கள் ஏ.ஜே.செந்தில்அரசன், தி.ரா.ரவி, செயற்பொறியாளர் (திட்டம்) மேற்கு மண்டலம் எஸ்.ரவிச்சந்திரன், மாநகர கல்வி அலுவலர் கே.பழனி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...