கோவை : ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படாமல், கொங்கு மண்டலத்தை வஞ்சிக்கும் வகையில் ரயிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படாமல், கொங்கு மண்டலத்தை வஞ்சிக்கும் வகையில் ரயிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை முதல் 21-ம் தேதி வரை ஈரோடு ரயில் நிலையத்தில் மேற்கொள்ள இருக்கும் ரயில்பாதை பராமரிப்பு பணிக்காக பல ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது. குறிப்பாக, கோவைக்கும் -சென்னைக்கும் இடையே இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு நேர வாராந்திர ரயில் மற்றும் அனைத்து ரயில்களும் ஆகும். மேலும், டெல்டா மாவட்டப் பகுதிக்கு தினசரி இயக்கப்படும் ஜனசகாப்தி மற்றும் செம்மொழி எக்ஸ்பிரஸ்களும் 5 நாட்களுக்கு ரத்து செய்யதுள்ளது தென்னக இரயில்வே. இந்த ரயில்களை பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக மாற்று பாதையில் இயக்கலாம். ஆனால், ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. ஆனால், எர்ணாகுளம்-காரைக்கால், மங்களூர் - சென்னை எக்மோர் ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. எனவே, கோவைக்கும், டெல்டா மாவட்டத்திற்கும் மேற்கண்ட 5 நாட்களுக்கு ரயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுபோல, சென்னை - கோவை - சென்னை கோவை எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட 5 நாட்களுக்கு சென்னை மற்றும் சேலத்திற்கு இடையே இயக்கப்படலாம். ஆனால், தென்னக இரயில்வே அதை மேற்கொள்ளவில்லை.
கோவை எக்ஸ்பிரஸ் விடப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் இயற்கை பேரழிவு ஏற்பட்ட போதும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டது இல்லை. இது போல தினந்தோறும் கோவை - சென்னை-கோவை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யயப்பட்டுள்ளது. ஆனால், இதன் பின்பு வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படவில்லை. மும்பை குர்லா எக்ஸ்பிரஸ்-ம் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் கோவையில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது கோவை, திருப்பூர், ஈரோடு மக்களுக்கு தென்னக ரயில்வேயால் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுவதற்கு மேலும் ஒரு உதாரணம். பகல் நேரத்தில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இரவு நேர ரயில் செம்மொழி எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்வது எவ்வாறு ஏற்புடையது.
முக்கியமாக, இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டத்தில் கேரளாவில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் ரயில்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இது எந்த காரணத்தால், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், பெங்களூர் இண்டர்சிட்டி , இரப்திசாகர் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ்,மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் இதே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகல் நேரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.