தடையை மீறி நடந்த களிமங்கலம் பகுதி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

கோவை : வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள களிமங்கலம் பகுதியில் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இன்று தடையை மீறி நடந்த கட்டுமானப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

கோவை : வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள களிமங்கலம் பகுதியில் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இன்று தடையை மீறி நடந்த கட்டுமானப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆலங்குடி, களிமங்கலம் பகுதிகளில் தென்கரை, செரூர் கிராமங்களில் சேர்த்து 4,710 வீடுகள் கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து மலைவாழ் பழங்குடியின மக்களின் சமூக அமைப்பொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்புதல் பெறாதவரை வீடுகட்டும் திட்டப்பணிகளுக்கு நீதிபதிகள் நேற்று தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

இதனிடையே, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், இன்று காலை மீண்டும் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு, நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு நீதிமன்ற தடை ஆணை எதும் கிடைக்கப்பெறவில்லை என அவர் கூறினார். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டது. பின்னர், ஊழியர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...