நீலகிரி : நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 5 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஆய்வறிக்கையை சமர்பித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் 520 இடங்களில் மண் சரிவும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகியது. இதனால், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் காய்கறிகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தமிழக அரசு இன்னும் நிவாரண பணிகளில் தொய்வடைந்து உள்ளது.

இதனிடையே, கடந்த 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நீலகிரியில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க தி.மு.க. சார்பில் 10 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக ஆ. ராசா மழையால் பாதிக்கப்பட்ட கூடலூர், பந்தலூர், ஓவேலி, நடுவட்டம்,
இத்தலார், எமரால்டு போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை தி.மு.க. சார்பில் வழங்கி வந்தார். இந்த நிலையில், ஆ. ராசா 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் அவர் பேசியதாவது :- ஓவேலி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகியுள்ள நிலையில், வனத்துறையினர் இடிந்த வீடுகளை சரி செய்ய கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல தடை செய்கின்றனர். இதனால், ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதால், கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். அத்துடன் எல்ல மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சைனுதின் என்ற இளைஞரது சடலம் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது, எனவே, இளைஞரின் சடலத்தை துரிதகதியில் தேடி எடுக்க வேண்டும். இல்லை எனில் அவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.