நீலகிரி : நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போடப்படும் சாலைகள் தரமற்றவையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் (காலனியில்) ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 250 மீட்டர் கான்கரீட் சாலை அமைக்கும் பணி மேலூர் ஊராட்சி சார்பில் தற்போது நடைப்பெற்று வருகிறது. ஏறத்தாழ 10 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மேலூர் ஊராட்சி சார்பில் நடைபெறும் இப்பணியில் முறையாக கலவை கலக்காமல் 1-1/2 இன்ச் அடிக்கலவையை சரியாக போடாமல், மேலாக மட்டும் ஜல்லி கற்களை பரப்பி எம்.சாண்ட்(செயற்கை மணல்) கொண்டு தூவி சிமெண்ட் கண்துடைப்பாக பூசப்பட்டு இப்பணி நடைப்பெறுவதாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சாலையை இப்படி அமைத்தால் எந்த பயனும் இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மேலும், குன்னூர் பஞ்சாயத்து யூனியன் இந்தப் பணியை செய்யும் பொறியாளரிடம் பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு சாலையை ஆய்வு செய்து முறையாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.