கோவை : கோவையில் தொழில் அதிபர் உட்பட 3 பேர் கத்திமுனையில் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கணபதி பாலாஜி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த வேலு தேவரின் மகன் குணசேகரன் (56).இவர் பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஒரு பிரச்சினையில் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஆதி கணேசன் என்பவருடைய தொடர்பு கிடைத்துள்ளது. அவர் குறைந்த விலையில் இடம் இருப்பதாகக் கூறி சத்யா என்ற பெண்ணின் அலைபேசி எண்ணை குணசேகரிடம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, குணசேகரன் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி காலை சுமார் 10.30 மணி அளவில் இடம் சம்பந்தமாக பேச சத்யா, குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், இடத்தை நேரடியாக பார்க்கலாம் எனக் கூறி குணசேகரனுடன் அவரது ஓட்டுனர் ரகுபதி மற்றும் அவரது நண்பர் ஜென்சன் ஆகியோர் சென்றனர். இப்படி சென்று கொண்டிருந்த பொழுது சத்தியா விநாயகபுரத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரும் தங்களுடன் வருவார் என சொல்லி அப்பகுதியில் வண்டி நிறுத்தியுள்ளார்.
அப்போது, அங்கே திடீரென கணபதி மாநகரை சேர்ந்த ஜெயக்குமாரும், அவரது மனைவி அனு மற்றும் பரமக்குடியைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் உள்பட சிலர், கத்திமுனையில் மூன்று பேரையும் காரின் பின் பக்கத்தில் உட்கார வைத்து கைகளை கட்டி வாய்களை பொத்தியுள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் மூன்று பேரையும் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அம்மாபட்டி என்ற இடத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் சீட் குடோனுக்கு கடத்திச் சென்று அடைத்து வைத்தனர். பின்னர், குணசேகரன் மற்றும் அவருடன் சென்ற இருவரின் கையில் இருந்த பணம் நகை செல்போன் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட அனைத்தையும் பறித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட 3 பேரையும் கட்டை, கயிறு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அதேபோல, எட்டு லட்சம் ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியும் உள்ளனர். இதன் பேரில், சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை அக்கவுண்ட் மூலமும் கடத்தல்காரர்கள் பெற்றுள்ளனர். மேலும், செக் புக், வெற்று பத்திரம் உள்ளிட்டவற்றிலும் கையெழுத்து வாங்கியுள்ளனர். இப்படி இருக்க கடத்தல்காரர்கள் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, நேற்று அதிகாலை குணசேகரன் உட்பட 3 பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்று சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில், சரவணம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் கந்தசாமி, பாரதிராஜா, சரத்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் குற்றவாளிகளை கைது செய்ய விரைந்தனர். இதை தொடர்ந்து போலீசார் ஆதி கணேசன்44, ஜெயகுமார் (52), சத்யா(27)(பெண்), முத்துப்பாண்டி(38), செந்தில்குமார் (41), கோவிந்தராஜ் (50) ஆகிய 6 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர் . மேலும், குற்றத்தில் தொடர்புடைய கண்ணன், அனு ஆகியோர் மற்றும் பெயர் தெரியாத சிலரை தேடிவருகின்றனர். இதில், ஆதி கணேசன் என்பவர் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மற்றும் அமாசை கொலை நீதிக்கான கூட்டமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் என்பதும், முத்து பாண்டி என்பவர் போலி பத்திரிக்கையாளர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147 ,148 ,120b ,323 ,324 ,342, 364 ,397 ,506 (2) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.