ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக திருப்பூரில் நடுநிலைப்பள்ளியை இடிக்க எதிர்ப்பு : அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக திருப்பூரில் பாரம்பரியமிக்க நடுநிலைப்பள்ளியை இடிக்கக் கூடாது எனக் கூறி மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக திருப்பூரில் பாரம்பரியமிக்க நடுநிலைப்பள்ளியை இடிக்கக் கூடாது எனக் கூறி மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் புதியதாகவும், விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையமாகவும் கட்டப்பட உள்ளது. அதன் அருகிலேயே கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட உள்ளதால், தற்போது செயல்பட்டு வரும் முத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க உள்ளது. இதற்கு அப்பள்ளியில் பயின்று வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித் துறையினர் சார்பில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள், பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும், வேறு பள்ளிகளில் தங்கள் மாணவ, மாணவிகளை சேர்க்கும்போது அவர்களின் போக்குவரத்து நேரமும் அதிகமாவதோடு, பாதுகாப்பு வசதியின்மை ஏற்படுவதால், பள்ளியை இப்பகுதியிலேயே செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். 



இதனிடையே, கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வந்த மாநகராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நிறைவடையும் முன்பாகவே மாநகராட்சி ஆணையர் சிவகுமார் கூட்டத்தில் இருந்து கிளம்பிச் சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் கருத்துக் கேட்புக் கூட்டம் முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே முடிவடைந்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...