கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 8 கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி டாஸ்மாக் கடை எண் 2962 கடையில் ஊழியராக பணியாற்றும் ராஜா (45) என்பவர் சமூக விரோதிகளால் கடந்த 14ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும், பாதுகாப்பு அம்சங்களை உடனே ஏற்படுத்தி தர வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. கோவையில் நாளொன்றுக்கு 8 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் கொடுக்கும் கடைகள் திறக்கப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த டாஸ்மாக் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, படுகொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வேண்டும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினர். மேலும், டாஸ்மாக் கடைகளின் வேலைநேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனவும், ஊரகப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.