கோவை : பூளுவப்பட்டி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கஞ்சா விற்பனை செய்த இருவரை ஆலந்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ஆலாந்துறை அருகே பூளுவப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த முகாமில் உள்ள ஒரு சில இளைஞர்கள் கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலாந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் தலைமையிலான காவலர்கள் திடீரென முகாமில் சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த ராகன் மற்றும் தினேஷ்வந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் முகாம் மற்றும் பூளுவப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.