72 ஆண்டுகளாக காஷ்மீரில் பட்டியல் இனத்தவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டது குறித்து கண்டுகொள்ளாதது ஏன் : தி.மு.க.விற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

கோவை : சமுக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் காஷ்மீரில் பட்டியல் இனத்தவர்களுக்கு 72 ஆண்டுகளாக சலுகைகள் மறுக்கப்பட்டு வந்தது பற்றி கண்டுகொள்ளாதது ஏன்..? என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை : சமுக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் காஷ்மீரில் பட்டியல் இனத்தவர்களுக்கு 72 ஆண்டுகளாக சலுகைகள் மறுக்கப்பட்டு வந்தது பற்றி கண்டுகொள்ளாதது ஏன்..? என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.



முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கின்றன. சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி பேசும் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. போன்ற கட்சிகள் கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீரில் வசிக்கும் பட்டியல் இனத்தவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் எந்தவித சலுகைகளும் அளிக்கவில்லை, அத்துடன் பழங்குடியின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது, பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கபட வில்லை. இது குறித்து ஏன் இந்த கட்சிகள் கவலைப்படவில்லை. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மூலம் அந்த மாநிலம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. மாறாக, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதுடன், உள்நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தவே அது பயன்பட்டு வந்தது. எனவே, காஷ்மீரில் வழங்கப்பட்ட சலுகைகள் யாருக்காக பயன்படுத்தப்பட்டன. இது குறித்து தி.மு.க. கேள்வி கேட்கட்டும். மேலும், தற்போது இந்த சட்டப்பிரவு நீக்கப்பட்டதன் மூலம் புதிய இந்தியாவை பிரதமர் உருவாக்கியதுடன், அனைத்து மாநிலங்களும் எந்த பிரிவு இன்றி ஒருங்கிணைந்ததே இந்தியா என்பதை நிருபித்துள்ளார். என பேசினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...