கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான நடன போட்டியில் உதகையைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான நடன போட்டியில் உதகையைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஒருவரமாக உலக நாடுகளுக்கிடையேயான நடன போட்டியனது நடைபெற்றது. இதில், ஆஸ்திரிலியா, தென் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமனோர் கலந்து கொண்ட போட்டியில், கோவையிலிருந்து ஏ.டி.எஸ். குரு தலைமையில் சென்ற நபஃல், அலீனா, ஷேன்ரா, நிகில், பிகாந், அருமன், ரெஷி ஆகிய 7 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் குழு நடன போட்டியில் பல நாடுகளை அரையிறுதி வரை சென்றனர். இதன்மூலம், இம்மாணவர்கள் இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்தது மட்டுமல்லாமல், தமிழகத்திற்கும் பெருமையைச் சேர்த்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்த மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாகத்துடன் வரவேர்த்தனர். மேலும், அவர்களுக்கு மாலை அணிவித்து, கட்டி அணைத்து இனிப்புகளை வழங்கியும், இந்தியாவின் தேசிய கொடியை முன்னிறுத்தியும் கொண்டாடினர்.