நீலகிரி : நீர்நிலைகள் முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது. என நீலகிரி மாவட்டத்தில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்த நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குருத்துக்குளி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் சீமான் நேரில் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது :- நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை கூறுவதை விட்டுவிட்டு, மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும். நீர்நிலைகள் முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது. மேலும், நீலகிரியில் உள்ள பல விளை நிலங்களில் குத்தகை அடிப்படையில் பலர் விவசாயம் செய்வதால், நன்கு விசாரித்து குத்தகைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமே ஒழிய, நில உரிமையாளர்களுக்கு அந்தத் தொகை சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கேரளாவில் ராகுல் கூறியது போல், எந்தக்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும், என்றார்.