நீலகிரி : குன்னூர் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் நடந்த 73-வது சுதந்திர தின விழாவில் வெலிங்டன் ராணுவ பேண்ட் வாத்தியத்தில் இசைக்கப்பட்ட தேசபக்தி பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

மத்திய அரசு பாதுகாப்பு துறைக்கு சொந்தமான அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் பொதுமேலாளர் பி.கே.சிங் பங்கேற்று தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். டி.எஸ்.சி., கர்னல் சுமித் தத்தா, கர்னல் பாட்டீல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், ராணுவ பாதுகாப்பு குழுவினர், கார்டைட் தொழிற்சாலை குழு பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தொடர்ந்து, வெலிங்டன் ராணுவ மையத்தின் பேண்ட் வாத்திய குழுவினர் இசையிலேயே தேச பக்தி பாடல்கள், திரையிசை பாடல்கள் இசைத்து நடனத்துடன் அரங்கேற்றியது அனைவரையும் கவர்ந்தது. பின்னர், மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது.