கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளின் சைக்கிள் பேரணி

கோவை : சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்ற சைக்கிள் பேரணி கோவையில் நடைபெற்றது

கோவை : சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்ற சைக்கிள் பேரணி கோவையில் நடைபெற்றது



நம் நாட்டின் 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி வடகோவையில் இருந்து மேட்டுப்பாளையம், அன்னூர் சின்னியம்பாளையம் வரை சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்டது. இப்பேரணியில் இரண்டு பெண்கள், குழந்தைகள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 56 பேர் தேசிய கொடியுடன் சைக்கிள் பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.



மேலும் இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறும்போது :- நம் இந்திய திருநாட்டில் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதமாகவும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த சுதந்திர தினத்தை கடைபிடிக்க வேண்டும். இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். நம் இந்திய திருநாட்டின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக பெருமையில் ஆர்வத்துடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன், என தெரிவித்தனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...