கோவை களிமங்கலம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வரும் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

கோவை : வெள்ளியங்கிரியில் மலை அடிவாரத்தில் உள்ள களிமங்கலம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வரும் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவை : வெள்ளியங்கிரியில் மலை அடிவாரத்தில் உள்ள களிமங்கலம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மேற்கொண்டு வரும் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆலங்குடி, களிமங்கலம் பகுதிகளில் தென்கரை, செரூர் கிராமங்களில் சேர்த்து 4,710 வீடுகள் கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து மலைவாழ் பழங்குடியின மக்களின் சமூக அமைப்பொன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த திட்டத்திற்கு நகர அமைப்புத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் பரிந்துரை மட்டுமே பெறப்பட்டுள்ளது. ஒப்புதல் வழங்கப்படவில்லை எனக் கூறி அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதேபோல், மனுதாரர் தரப்பு குறிப்பிடுகையில், அந்த மலைப்பகுதி அருகில் செயல்பட்ட இண்டஸ் எனும் கல்லூரி மூடப்பட்டது. மூடப்பட்ட அந்த கல்லூரிக்கு 100 மீட்டருக்கு அருகில்தான் இந்த 4,710 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வாதாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மலை பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் பெறாதவரை வீடுகட்டும் திட்டப்பணிகளுக்கு தடை விதித்து வழக்கை செப்டம்பர் 18 ஆம் தேதி ஒத்திவைத்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...