கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 73வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துணைவேந்தர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ. குமார் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினவிழா உரையாற்றினார். இந்தியத் தலைவர்களின் தியாகங்களை துணைவேந்தர் தமது உரையில் நினைவு கூர்ந்தார். தேசிய கவி கூறியது போல ஒற்றுமை மட்டுமே நமது சுதந்திரத்தைத் தக்க வைக்கும் என எடுத்துரைத்தார். உலகளவில் இந்தியா உணவுப்பொருட்கள் உற்பத்தியில் 2வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். நமது நாட்டில் விவசாய நிலங்களின் அளவு குறைந்து கொண்டு வரும் நிலையிலும், பருவமழை பொய்த்தல், குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு மழை பெய்தல் மற்றும் மேகங்களின் வெடித்து அதிகளவு மழை பெய்தல் போன்ற காரணங்கள் தற்போது வேளாண் பொறியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாபப்புக்காக நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டுமென்று அனைவருக்கும் அரைகூவல் விடுத்தார்.
பசுமைப்புரட்சியில் வேளாண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதால், இன்று நமது நாடு உணவு உற்பத்தியில் மிகுந்த தன்னிறைவு நிலையை மக்கள் தொகை பெருக்கத்திற்கும் இடையில் நாம் அடைந்துள்ளோம் என எடுரைத்தார். பயறு உற்பத்தியைப் பெருக்கி தரமான விதைகளை உற்பத்தி செய்து உழவர்களுக்கு வழங்க விஞ்ஞானிகள் உறுதிகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அறிவே தேசத்தின் சொத்து என்பதால் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், ஆசிரியர்களும் கடுமையாக உழைத்து வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்ததை மேன்மேலும் உயர்த்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அனைத்து நிலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பிறகு, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழமையான சென்னை வேளாண் மாணவர்கள் சங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பிறகு, பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மாணவர் படை மாணவர்கள், தேசிய சமுக சேவை மாணவர்கள் மற்றும் பல்கலைகழக ஆசியர்கள் ஆகியோர் துணைவேந்தர் தலைமையில் மரக்கன்றுகளை நட்டனர். முன்னதாக பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை மாணவர்கள் அளித்த வரவேற்பு மரியாதையை ஏற்றார். சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் ஆரம்பப்பள்ளி சிறார்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.