கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த பேபி மஹா ஸ்வேதா என்ற சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சித்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
திருப்பூர் : அமெரிக்காவில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த பேபி மஹா ஸ்வேதா என்ற சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சித்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பி.யூ. கிருஷ்ணன். இவருடைய மகளான பேபி மஹா ஸ்வேதா தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறார். கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சுஜித் தாஸ் என்பவர், " நான் யாரிடம் சொல்ல வேண்டும் " என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த குறும்படத்தில் பேபி மஹா ஸ்வேதா நடித்திருந்தார். அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்ற சர்வதேச குறும்பட போட்டிக்கு இந்த குறும்படமானது அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் குறும்பட திரையிடல் விழா நடைபெற்று உள்ளது. 60 நாடுகளை சேர்ந்த குறும்படங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இதில் , பேபி மஹா ஸ்வேதா நடித்துள்ள " நான் யாரிடம் சொல்ல வேண்டும் " என்ற குறும்படத்திற்கு , சிறந்த குழந்தை நட்சத்திர விருதானது கிடைத்துள்ளது. 5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்த விருதானது கொடுக்கப்பட்டுள்ளது.
சிறு வயது முதலே டி.வி., யூ டியூப் போன்றவற்றில் வீடியோக்கள் பார்த்து, அதே போல் நடித்து காட்டுவது என்பது பேபி மஹா ஸ்வேதாவிற்கு பிடித்த செயல் என்று குறிப்பிடுகிறார் அவரது தந்தை. தனது சிறு வயது சேமிப்பை வைத்து தனக்கு வழிகாட்டும்படி கூறியதை அடுத்து, மகளின் ஆசையை நிறைவேற்ற அவரது பெற்றோர்கள் எடுத்த முயற்சிக்கு, இந்த விருது கிடைத்ததோடு மட்டுமில்லாமல், மகளின் ஆசையை தாண்டி தற்போது திருப்பூரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சென்றுள்ளது.