திருப்பூர் : 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தேசிய கொடியேற்றி வைத்து, ரூ. 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்தியா முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் சார்பில் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்தபின் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவித்தனர். மேலும், மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.