கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை : குற்றவாளிகளை விரைந்து கைது செய்த ராமநாதபுரம் போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு

கோவை : ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாணவர்களை குறிவைத்து பல கும்பல்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்படியிருக்க கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தனிப்படை போலீசார் கல்லூரிகளை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, அந்தந்த காவல் எல்லையில் போலீசார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களை கண்காணித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சுங்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா மற்றும் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான காவலர்கள் மகேந்திரன், சண்முகம், ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுங்கம் பகுதியில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர். 



சுங்கம் தனியார் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த உதய்விக்ரம் (19), மாரிமுத்து (20) ஆகிய இரண்டு இளைஞர்களும், அதேபோல சுங்கம் புறவழிச்சாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த விஜய்குமார் (23), நவீன்குமார் (23), கௌசிக் (22) ஆகியோரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் 2,250 ரூபாய் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலில் ஒரு பிரிவினரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...