73-வது சுதந்திர தின விழாவில் ரூ.44.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை : 73-வது சுதந்திர தின விழாவையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.44.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு. ராசாமணி பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.

கோவை : 73-வது சுதந்திர தின விழாவையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.44.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு. ராசாமணி பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.

நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சரியாக 09.03 மணிக்கு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். 



பின்னர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில் 44 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரத்து 251 ரூபாய்க்கான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.



அதாவது, மாற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ. 87, 400-ம், சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு சூலூர் வட்டம் 8 பேருக்கு ரூ. 62,750-ம், சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவு கோவை வடக்கு வட்டம் சார்பில் 12 பேருக்கு ரூ.1,44,000-ம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 12 பேருக்கு ரூ. 1,92,955-ம், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் 20 பேருக்கு ரூ. 10,00,000-ம், தோட்டக்கலை துறை அலுவலகம் சார்பில் 3 பேருக்கு 4,50,000-ம், தாட்கோ சார்பில் 5 பேருக்கு ரூ. 22,64,106-ம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 5 பேருக்கு ரூ.1,80,000-ம், வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ. 62,040, வேளண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் 2 பேருக்கு ரூ. 6,00,000-ம், மகளிர் திட்டம் சார்பில் 6 பேருக்கு 21,45,000-ம், மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பேருக்கு ரூ. 2,90,30,000-ம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் 5 பேருக்கு ரூ. 31,15,000ம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 15 பேருக்கு ரூ. 31,50,000, தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 23 பேருக்கு ரூ. 2,24,000 என 129 பேருக்கு 44,27,07,251 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார். இதன் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...