கோவை : 73-வது சுதந்திர தின விழாவையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் கு.ராசாமணி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
கோவை : 73-வது சுதந்திர தின விழாவையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் கு.ராசாமணி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சரியாக 09.03 மணிக்கு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.