தெலுங்குபாளையம் மக்கள் மனுநீதி நாள் முகாமில் ரூ. 4.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை : தெலுங்குபாளையம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 65 பயனாளிகளுக்கு ரூ. 4.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

கோவை : தெலுங்குபாளையம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 65 பயனாளிகளுக்கு ரூ. 4.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.



கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் கிராமத்தில் இராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 65 பயனாளிகளுக்கு ரூ.4.64 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதாவது, சலவை பெட்டி, தையல் இயந்திரம் 4 பயனாளிகளுக்கு ரூ. 16,000 மதிப்பிலும், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை 5 பயனாளிகளுக்கு ரூ. 30,000 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி 3 பயனாளிகளுக்கு ரூ. 7,500 மதிப்பிலும், முதியோர் உதவித்தொகை 11 பயனாளிகளுக்கும், 14 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலும் வழங்கப்பட்டது.

மேலும், இலவச வீட்டுமனை பட்டா 3 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 3 பயனாளிகளுக்கும், வருவாய் துறை சான்றுகள் 2 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாறுதல் 8 பயனாளிகளுக்கும், சமூக நலத்துறையின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ. 50,000 மதிப்பிலான வைப்பு நிதிப் பத்திரங்கள் 5 பயனாளிகளுக்கு ரூ.2,50,000 மதிப்பிலும், தேசிய தோட்டக்கலை இயக்கம் காய்கறி பரப்பு அதிகரித்தல் திட்டத்தின் கீழ் வெண்டை விதைகள் ஒரு பயனாளிக்கு ரூ.20,000 மதிப்பிலும், சொட்டுநீர் பாசனம் அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ. 1,01,0120 மதிப்பிலும் என மொத்தம் 65 பயனாளிகளுக்கு ரூ. 4,64,512 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அமுதன், உதவி இயக்குநர் நிலஅளவை தவமணி, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை உமாராணி வட்டாட்சியர் (வடக்கு) மகேஷ் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...