நீலகிரியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று பார்வையிட்டார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று பார்வையிட்டார்.



கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. மேலும், நகரங்களை இணைக்கும் சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். 



இந்த நிலையில், உதகை அருகே உள்ள எமரால்டு, குருத்துக்குளி, அட்டுபாயில், காட்டு குப்பை ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இயற்கைப் பேரிடர்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களுக்கு தேவைகளை அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. தற்போது சற்று இயல்பு நிலை திரும்பி உள்ளதால், முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கணக்கெடுக்கப்பட்டு செய்து கொடுக்கப்படும், கன மழையால் பாதிக்கப்பட்ட கூடலூர் பகுதிகளை நாளை ஆய்வு செய்ய உள்ளேன், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...