கோவை : கண்டிவழி மலைகிராமத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்க கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக ஆனைகட்டி மலைப் பகுதியில் உள்ள கண்டிவழி பழங்குடியின கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமையான வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் பருவமழையின் காரணமாக, 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நிலையற்ற இரவு நேரங்களையே கழித்து வருகின்றனர். மேலும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2.1 லட்சம் ஒதுக்கீடு செய்தும், அங்குள்ள மலைவாழ் மக்கள் தினக்கூலிக்கு செல்வதால், எஞ்சிய தொகையை போட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

எனவே, இதனை அறிந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மலைவாழ் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், சேதமடைந்த வீடுகளை பதிலாக பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டித் தர முடிவு செய்துள்ளனர். மேலும், பல்வேறு அரசு துறைகள், தனியார் அமைப்புகளும் பழங்குடியின மக்களின் வீடுகளை சீரமைக்கும் பணிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. இருப்பினும், இன்னும் பலர் ஆதரவு கரம் நீட்டினால் கனமழை மற்றும் வெள்ளத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் எளிதில் முடிவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.