கோவை : கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சவாலான ஒன்றாக இருக்கிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை மக்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும். வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை நடைபெறுவது போல, மாநகரில் 51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் இந்த மாத இறுதிக்குள் கொண்டு வரப்படும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், குப்பை போடும் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் குப்பை வரி வாங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும், மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாளைக்குள் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார்.