கோவை மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவின் புதிய உதவி ஆணையாளர் பொறுப்பேற்பு

கோவை : கோவை மாநகர நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையாளராக ரமேஷ் கிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை : கோவை மாநகர நுண்ணறிவு பிரிவின் உதவி ஆணையாளராக ரமேஷ் கிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளராக சௌந்தர ராஜன் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பணி ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பணியிடம் காலியாக இருந்தது. இப்படி இருக்க சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் கூடுதலாக மாநகர நுண்ணறிவு பிரிவு பணியையும் கவனித்து வந்தார். 



இந்த நிலையில், திருப்பூரில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த ரமேஷ் கிருஷ்ணன் இன்று கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், இவர் ஏற்கனவே கோவை தெற்கு பகுதியில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இவர் கோவையில் உதவி ஆணையாளராக இருந்த போது அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...