கோவை : பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மோசடிக்கான முகாந்திரம் ஏற்படுத்தி இருக்கும் நிறுவன உரிமையாளர்களை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோவை மாநகர் காவல்துறை துணை ஆணையரிடம் பா.ம.க மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வாரத்தைக் கூறி மோசடி நடந்து வருவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் புகார் அளித்தோம். மே மாதத்தில் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்தி இந்த மோசடியில் சம்பந்தம் உள்ள 6 நிறுவனங்களின் பெயரையும் வெளியிட்டோம். காவல்துறை மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து மோசடி கும்பலையும் கைது செய்தது. இதேபோல, மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மிகப் பெரிய மோசடி நடந்து வருகிறது. முதலீடு செய்யும் பணத்திற்கு 20 விழுக்காடு வட்டி மாதம்தோறும் தருவதாகவும் அல்லது ஆறு மாதத்தில் 100 விழுக்காடு வட்டி பணம் மற்றும் முன்பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டி முதலீடு செய்ய வைக்கின்றனர்.
இதை நம்பி பல பேர் முதலீடு செய்து வருகின்றனர். இது மிகப் பெரிய மோசடியாக போய் முடியும். இது சங்கிலித் தொடர் வணிகம் அல்லது பான்சி ஸ்கீம் தான். அது மட்டும் இல்லாமல் மாதம்தோறும் வட்டி தரும் போது பொய்யான ரசீது (பொருட்கள் வாங்கியது போல்) தருகின்றனர். நாங்கள் இதை செய்து வரும் 6 நிறுவனங்களின் பெயரை அடுத்த பக்கத்தில் கொடுத்து உள்ளோம். இந்த நிறுவனங்களின் செயல்பாட்டை கவனிக்குமாறும், தேவைப்பட்டால் அழைத்து விசாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.