வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்ட கோவை சிறுவாணி விழுதுகள் அமைப்பினர்

கோவை : சிறுவாணியில்‌ பெய்த கனமழையினால்‌ பாதிக்கப்பட்ட மலைவாழ்‌ கிராம மக்களுக்கு நிவாரணப் பணிகளை பல்வேறு அமைப்புகளின்‌ உ.தவியுடன் சிறுவாணி விழுதுகள் அமைப்பினர் மேற்கொண்டனர்.

கோவை : சிறுவாணியில்‌ பெய்த கனமழையினால்‌ பாதிக்கப்பட்ட மலைவாழ்‌ கிராம மக்களுக்கு நிவாரணப் பணிகளை பல்வேறு அமைப்புகளின்‌ உ.தவியுடன் சிறுவாணி விழுதுகள் அமைப்பினர் மேற்கொண்டனர்.

கடந்த 8-ம் தேதி சிறுவாணியில் நொய்யலின் கிளை நதிகளில் உள்ள நீரின் நிலவரத்தைப் பார்க்க சென்ற போது, நண்டங்கரை தடுப்பணையில் மதுபோதையில் அணைக்குள் குதித்து நீந்த முடியாமல் நீரில் மூழ்கிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நபரை சிறுவாணி விழுதுகளின் நண்பர்கள் உடனடியாக செயல்பட்டு அந்நபரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து, 9 மற்றும் 10-ம் தேதிகளில் போரத்தி பதி, கல்கொத்தி பதி, சிறுவாணி, வெள்ளபதி, பொட்ட பதி மற்றும் சாடிவயல் பதி உள்ளிட்ட 6 மலைக்கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் மற்றும் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தனர்.

இந்த நிவாரணப் பணிகளில் புதியதோர் உலகம் செய்வோம் சமூக சேவை மையம், நல்லறம் அறக்கட்டளை, ஈஷா அறக்கட்டளை மற்றும் சிறுவாணி விழுதுகள் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டன. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...