கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமியிடம் 50 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி துணை ஆணையாளர் ச. பிரசன்னா ராமசாமியின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 50 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில் 2 மனுதாரர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களும், 2 மனுதாரர்களுக்கு வரிவிதிப்பு புத்தகத்தினையும் மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்கள் வழங்கினார். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள் அண்ணாத்துரை, செந்தில்குமார் ரத்தினம், ம.செல்வன், மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் ஞானவேல், நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), மாணிக்கம் (வருங்கால வைப்புநிதி), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.