சிங்காநல்லூர் காவல் எல்லையில் 55 கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் காவல் எல்லையில் 55 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் தொடங்கி வைத்தார்.


கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் காவல் எல்லையில் 55 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் தொடங்கி வைத்தார்.



கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரணின் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.



முதற்கட்டமாக ஆர்.எஸ்.புரத்தில் துவங்கி, பீளமேடு, சாய்பாபா கோவில், காட்டூர், போத்தனூர் ஆகிய காவல் எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இ-1 சிங்காநல்லூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, புனரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த துவக்கவிழா நிகழ்வானது, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், மாநகர காவல் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ரமேஷ் கிருஷ்ணா, உதவி ஆணையாளர் சோமசுந்தரம், சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன், உதவி ஆய்வாளர்கள் அர்ஜூன் குமார், காசி பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...