திருப்பூரில் பல நாட்களாக குப்பைகளை அள்ளாத மாநகராட்சியைக் கண்டித்து குப்பைக்குள் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா

திருப்பூர் : திருப்பூரில் பல நாட்களாக குப்பைகளை அள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் குப்பைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் பல நாட்களாக குப்பைகளை அள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் குப்பைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு எஸ்.வி. காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதியில் பல நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாததால், குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதற்கு முன்வராத காரணத்தால், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் குப்பையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை லாரியை அனுப்பி சுத்தம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...