கோவை : சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள குடியிருப்பில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி சாய்பாபா காலனி பாரதி பார்க் 2-வது வீதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரது வீட்டில் இருந்த சுமார் 30 அடி உயரமுள்ள சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் பிரேம்குமார் சாய்பாபா காலனி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தொடரும் சந்தனமர கடத்தலை தடுக்கும் வகையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தனிப்படை போலீசார் நேற்று சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரையும், அதே பகுதியைச் சேர்ந்த புங்கன் என்ற மகேந்திரன் என்பவரையும் சாய்பாபா காலனி அருகே வைத்து நேற்று கைது செய்தனர். இதையடுத்து, இவர்கள் நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.