பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. இதுவரை உண்மை குற்றவாளிகளை கண்டறியவில்லை : பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம்

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. இதுவரை உண்மை குற்றவாளிகளை கண்டறியபில்லை எனவும், பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களை தனித்தனி அறையில் வைத்து விசாரிக்க என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. இதுவரை உண்மை குற்றவாளிகளை கண்டறியபில்லை எனவும், பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களை தனித்தனி அறையில் வைத்து விசாரிக்க என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.



மழையால் கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் கூட்டாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எம்.பி., பி.ஆர். நடராஜன் கூறியதாவது :- சித்திரைசாவடி அணையில் இருந்து பேரூர் பகுதியில் உள்ள செங்குளத்திற்கு நீர் வருவதை வேண்டும் என்றே ஆளும் கட்சியினர் தடுத்துள்ளனர். குளத்திற்கு வரும் நீரை தடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளோம். மழை காரணமாக ஆத்துப்பாலத்தில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு உரிய இழப்பீடு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம் சார்பாக வழங்கப்படும் குடியிருப்புகள் நகரப் பகுதியிலே வழங்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கூறியதாவது :- கோவையில் 25 ஏக்கர் நிலம் கொடுத்தால் 100 கோடி செலவில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வர்த்தக மையம் அமைப்பது தொடர்பாக, டெல்லியில் உள்ள எம்.எஸ்.எம்.இ.யின் நிர்வாக இயக்குநரை சந்தித்துள்ளேன். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, நிர்பந்தத்தின் காரணமாக சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஆனால், இதுவரை உண்மை குற்றவாளிகளை சி.பி.ஐ. கண்டறியவில்லை. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 200 பெண்களை சி.பி.ஐ அதிகாரிகள் தனியாக வைத்து விசாரணை நடத்த வேண்டும், என வலியுறுத்தினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...